செவ்வாய், 25 மே, 2010





11111 சிரஞ்சீவி ரோஹிட்செல்லத்துக்கு தாத்தாவின் அன்பு முத்தங்கள். அப்பா, மற்றும் அம்மாவை மிகவும் விசரிதாக சொல்லவும். இன்று உனக்கு ஒரு கதை கூறபோகிறேன்.





11111 ஒரு ஊரில் ஒரு ஏழை விவசாயியாம். மிகுந்த கஷ்டப்பட்டு ஒரு நிலத்தை வாங்கினாராம். அந்த நிலத்தில் ஓர் கிணறு தோண்டினால் நல்ல தண்ணிர் கிடைக்கும் அந்த தண்ணீரை கொண்டு நல்லபடியாக விவசாயம் செய்து பெரிய ஆள்ஆக வளரவேண்டும் என்ற நியாமான ஆசையுடன் அதற்க்கான நிபுணர்களை அழைத்து ஆலோசனை பெற்று தானும் தனது பாரியாளும் (மனைவி) தினமும் தங்களால் இயன்றஅளவு தோண்டி வந்தார்களாம்.





11111 இவர்கள் இருவரும் விடா முயற்சியுடன் கிணறு தோண்டுவதை ஊரில் அனைவரும் கேலியும் கிண்டலும் பேசுவதை பற்றி கவலை படாது தங்கள் வேலையை தொடர்ந்தனர்.





11111 ஒரு அடி இரண்டு அடி என்று 18 அடி தோண்டியும் தண்ணீர் கிடைக்காது போகவே மிகவும் மனம் சோர்ந்து போனார்கள், இதில் பணப்பற்றாக்குறை தங்கள் எதிர் காலத்தை கேள்விகுறி ஆக்கியது . இனியும் தொடர்வது நலதல்ல என்ற முடிவுக்கு வந்து, அசையாகவாங்கிய நிலத்தை விற்றுவிட்டு வேறு ஊருக்கு சென்றுவிட்டனர்.





11111 இந்த நிலத்தை வாங்கிய நபர் எதற்கும் நாமும் சற்று தோண்டி பார்ப்போமே என்று இரண்டு அடி தோண்ட தண்ணீர் கிடைத்துவிட்டது, வங்கியாவர்க்கு சந்தோசம் தாங்கவில்லை.





11111 இந்த கதை நமக்கு கூறும் செய்தி யாது என்றல் எந்த செயலுக்கும் விடா முயற்சி தேவை என்பதே.